ரேரா என்றால் என்ன? ரி யல் எஸ்டேட் துறையில் முக்கியமான சட்டம் ஒன்று கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது . அதுதான் ` ரெரா ’ எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் ( ரியல் எஸ்டேட் ரெகுலேஷன் அண்டு டெவலப்மென்ட் ). நாடு முழுவதும் , சொத்து ( மனை , வீடு ) வாங்குபவர் களின் நலனைக் காக்கவும் , கட்டுமானத் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யவும் இந்தச் சட்டம் கொண்டு வரப்பபட்டுள்ளது . இந்தச் சட்டம் , 2017 மே மாதம் அமலுக்கு வந்தது . ரெரா சட்டத்தின்கீழ் , வீடு வாங்குபவர் அல்லது விற்பவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் நிவாரணம் பெறலாம் . இந்த அமைப்பு , இரண்டு மாதத்துக்குள் உரிய தீர்வு அல்லது நிவாரணம் வழங்கும் . ‘ ரெரா ’ சட்டம் நடைமுறைக்கு வந்து ஓராண்டு காலம் நிறை வடைந்த நிலையில் , இந்தச் சட்டம் இன்னும் பல மாநிலங்களில் செயல்படுத்தப்படவில்லை . மகாராஷ்டிரா மாநிலம் இந்தச் சட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியுள்ளது . இதை மத்தியப்பிரதேச மாநிலமும்...
Comments
Post a Comment