சென்னையில் வாடகைக்கு குடியிருப்போர் விவரத்தை 60 நாட்களுக்குள் போலீஸ் நிலையத்தில் தர வேண்டும்: கமிஷனர்

Important Message to all Landlords :

என்னென்ன ஆவணங்கள்?

இந்த திட்டம் மிகவும் எளிதானது. இதில் எந்தவித பயமும் தேவை இல்லை. வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டை வாடகைக்கு விட்ட, 15 நாட்களுக்குள் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில், வாடகை தாரர்களின் பெயர், ஒரு புகைப்படம், அவர்களது நிரந்தர முகவரி, ஏற்கனவே வசித்த முகவரி போன்ற விவரங்களை இதற்காக உள்ள விண்ணப்ப மனுக்களில் எழுதி, போலீஸ் நிலையங்களில் கொடுக்க வேண்டும்.

ரகசிய விபரங்கள்

வீட்டு உரிமையாளர்கள், வாடகை தாரர்களோடு போடும் ஒப்பந்தம் பற்றி எதுவும் போலீசுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை. வாடகை தாரர்கள் பற்றிய தகவல்கள் போலீஸ் நிலையங்களில் ரகசியமாக வைக்கப்படும். இந்த விவரங்கள் போலீஸ் நிலையங்களில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும்.

கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்:

அந்தந்த பகுதி துணை கமிஷனர்கள் அலுவலகங்களிலும், கமிஷனர் அலுவலகத்தில் உளவுப்பிரிவிலோ அல்லது குற்ற ஆவண காப்பகத்திலோ இந்த விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைப்பார்கள். வெளிமாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளில் இருந்து வாடகைக்கு வருபவர்களும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

வருகிற டிசம்பர் 1-ந்தேதியில் இருந்து, இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. அமலுக்கு வந்த 60 நாட்களுக்குள் வாடகை தாரர்கள் பற்றிய தகவல்களை வீட்டு உரிமையாளர்கள் போலீஸ் நிலையங்களில் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். இதற்கு வீட்டு உரிமையாளர்களே முழு பொறுப்பாளி ஆவார்கள்.

டெல்லி, மும்பையில்..

வாடகை தாரர்கள் பற்றி தெரிவிக்கப்படும் தகவல்கள் உண்மையானதா? என்பதை போலீசார் தனியாக ரகசியமாக விசாரித்து தெரிந்து கொள்வார்கள்.
டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் இந்த திட்டம் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. சென்னையில் தாமதமாகத்தான் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று கமிஷனர் ஜார்ஜ் கூறினார்.

Download the Form: 

http://www.nimmadhi.com/PoliceVerification_Tenant.pdf

Nimmadhi Property Management


Comments

 1. Thanks for sharing the informative post. This is very useful to buy a dream house in Chennai.
  Premium apartments in Chennai
  Luxury homes in Chennai

  ReplyDelete
 2. Thanks for sharing the informative post. This is very useful to buy a dream house in Chennai.
  Builders in Chennai
  Properties in Chennai

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி?

சொத்து (கிரைய )பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

பாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்!