சொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி?
சொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி? ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது? நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது?, சொத்து விற்பனை மூலம் கிடைத்த தொகையில் மூலதன ஆதாயத்தைக் குறைப்பது எப்படி என்பது குறித்து ஆடிட்டர் என்.எஸ். ஸ்ரீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம். ''சொத்து விற்றதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான லாபத்தைக் கணக்கிட முதலில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட விற்பனை விலை மற்றும் அதற்கான செலவுகள், வா...