வாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்!
வாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்! வீட்டு வாடகைபடிக்கு (ஹெச்.ஆர்.ஏ) வரிச் சலுகையைப் பெறுவதில்தான் எத்தனை குழப்பங்கள். இந்தக் கணக்கீடு எப்படி செய்யப்படுகிறது என்பதே பலருக்கும் புரிந்துகொள்ள முடிவதில்லை. தவிர, அந்தக் கணக்கீடுகளும் ஒரேமாதிரியாகவும் இருப்பதில்லை. ஊருக்கு ஊர் மாறுதல்களைக்கொண்டதாக இருக்கிறது. எந்த ஊருக்கு எப்படி கணக்கிடப்படுகிறது என்கிற குழப்பத்தில் தப்பும் தவறுமாக, ஏதோ ஒன்று கிடைத்தால் போதும் என்று பலரும் க்ளைம் செய்கின்றனர். வீட்டு வாடகைபடி வரிச் சலுகை க்ளைம் செய்வதில் புதிய விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசின் நேரடி வரி விதிப்பு ஆணையம். அதாவது, ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்குமேல் வீட்டு வாடகைபடி க்ளைம் செய்தால், வீட்டு உரிமையாளரின் பான் கார்டு எண் அவசியம் தர வேண்டும் என்று அறிவித்துள்ளது. வீட்டு வாடகைபடிக்கு எவ்வாறு லாபகரமாக வரி விலக்கு பெறலாம் என்று ஆடிட்டர் சத்தியநாராயணனுடன் பேசினோம். ''வருமான வரிச் சட்டம் 10(13ஏ) பிரிவின்படி ஹெச்.ஆர்.ஏ.-க்கு வரிச் சலுகை தரப்படுகிறது. வீட்டு வாடகைபடிக்கு வரிச் சலுகை பெற முதலில் வாடகை வீட்டில் குடியிரு