வீடு வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை!
வீடு வாங்கும் போது அருகில் பள்ளிகூடங்கள்
, மருத்துவமனைகள், கடைகள், அகலமான சாலைகள், மழை வந்தால் வெள்ளம் சூழாத பகுதி குடிநீர் வசதி மற்றும் ஆக்டிவாக இருக்கும் குடி இருப்போர் சங்கம் இருக்கின்றனவா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.
வீட்டு கடன்
வீட்டு கடன் வாங்க செல்லும் பொது, மொத்த மதிப்பில் நம்மை 20% - 25% முன் பணமாக வங்கி செலுத்த சொல்லும்.இது தவிர பதிவு கட்டணம், புது வீடு சென்ற உடன் ஆகும் செலவுகளுக்கு ஒரு தொகையை ஒதுக்க வேண்டும்.
வீட்டில் முதலீடு
செலவழிக்கும் இன்றைய தலை முறையை பார்க்கும் போது சம்பாதிக்க ஆரம்பித்த தொடக்கத்திலே வீட்டில் முதலீடு செய்வதுதான் சிறந்த வழி ஆகும்.
ரியல் எஸ்டேட் துறை 2018 இல் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது.
கடந்த ஆண்டு விற்பனை ஆகாமல் தேங்கி கிடந்த பல வீடுகள் ,அடுக்கு மாடி குடி இருப்புகள் இந்த ஆண்டு மிக குறைந்த விற்பனைக்கு வந்து இருக்கின்றன.
அதனால் 2018 வீடு வாங்க சிறந்த ஆண்டாக சொல்கிறார்கள் .
இன்சூரன்ஸ்
எல்லாம் செய்த நீங்கள் வீட்டுக்கு இன்சூரன்ஸ் எடுக்க மறந்து விடாதீர்கள்.அதேபோல, கடன் யார் பெயரில் உள்ளதோ அவருக்கு ஒரு டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க மறவாதீர்கள்.
இவை இரண்டும் மிக மிக அவசியம் .
சரியான வங்கியை தேர்ந்தெடுக்க வேண்டும்
குறைந்த வட்டி விகிதம், குறைந்த பிராசஸிங் கட்டணங்கள் கடனை எப்போது வேண்டுமானாலும் முழுவதுமாக திருப்பி செலுத்தக்கூடிய வசதி உள்ள வங்கிகளிடமே கடன் வாங்குங்கள்.
ஒரு வழக்கு அறிஞறிடம் கொடுத்து ஆவணங்கள் அனைத்தும் சட்டப்படி உள்ளனவா என்பதையும் சரிப்பார்த்துக்கொள்ளவும்.
ஒருவர் 40 லட்சம் ரூபாய்க்கு வீடு வாங்குகிறார் என்றால், 8-10 ரூபாய் சொந்த பணத்தை போட வேண்டும்.மீதியை வங்கியில் கடனாக பெற்று கொள்ளலாம். `இது தவிர பதிவு கட்டணம் 2-3 லட்சம் ரூபாய் ஆகும்.
வீடு வாங்க சிறந்த ஆண்டு -2018
இன்று நாம் வீட்டில் செய்யும் முதலீடு 10 அல்லது 20 ஆண்டுகள் கழித்து பார்க்கும் போது மிகசிறந்த முடிவாக தெரியும். என்பது எங்கள் நிம்மதியின் அன்பான வேண்டுகோள் ஆகும் .
Comments
Post a Comment