புறநகர்ப் பகுதியில் வீட்டுமனை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை!
மனையை வாங்கத் திட்டமிடும்போது அடிப்படை வசதிகளான போக்குவரத்து, கல்வி, மருத்துவம் போன்ற முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவில் அந்த வீட்டு மனை இருக்க வேண்டும்.
வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புத் தேவையில்லை. ஆனால், ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இவை இருந்தால் நல்லது.
``சொந்தமாக ஒரு வீட்டு மனையாவது வாங்கிடணும் பிழைப்புக்காகவும் உழைப்புக்காகவும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு வந்து செட்டிலாக நினைப்பவர்களின் எண்ணம் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்.
இந்த எண்ணத்தில் தவறில்லை. அதேசமயம் வீட்டுமனையைத் தேடும் அவசரத்தில், யார் யாரையோ நம்பி புறநகர் பகுதிகளில் தவறான வீட்டுமனையைத் தேர்வுசெய்து, பணத்தை வீணடித்துவிட்டோமோ என்று வருத்தப்படும் பலரையும் பார்க்க முடிகிறது.
`வீட்டைக் கட்டிப்பார்' என்பது மட்டுமல்ல, வீட்டுமனையை வாங்குவதும்கூட அத்தனை எளிதான விஷயமல்ல. நல்லதொரு மாதச் சம்பளத்தில் வேலைபார்க்கும் பலருக்கும் வீட்டுமனை வாங்குவதற்கான சேமிப்புக்குச் சிக்கலிருக்காது. ஆனால், அந்தச் சேமிப்பை சரியான வீட்டுமனையில் முதலீடு செய்வதில்தான் தவறிவிடுகிறார்கள்.
புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வீட்டுமனையைத் தேர்வுசெய்ய, மழைக்காலத்தில் செல்வதுதான் சரியானதாக இருக்கும். அப்போதுதான் அந்த இடம் மழைநீரால் சூழப்படும் அளவுக்குத் தாழ்வான பகுதியா என அறிந்துகொள்ள முடியும். வீட்டுமனைக்குச் செல்லும் பாதை எந்த அளவுக்குத் தரமானதாக இருக்கிறது என்பதையும்அறிந்துகொள்ள முடியும்.
அதேபோல, ஏரிப் பகுதிகளையொட்டிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வீடு கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ அனுமதி கிடைப்பதில்லை. ஆனால், நீர்ப்பிடிப்புப் பகுதி என்பதை மறைத்து ஃபிளாட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இப்படி வீட்டுமனையைத் தேர்ந்தெடுப்பதில் எண்ணற்றச் சிக்கல்கள் உள்ளன.
சரியான வீட்டுமனையைத் தேர்ந்தெடுக்க எதையெல்லாம் கவனத்தில்கொள்ள வேண்டும் ?
சரியான வீட்டுமனையைத் தேர்ந்தெடுக்க எதையெல்லாம் கவனத்தில்கொள்ள வேண்டும் ?
``ஒரு மனை வாங்குவதற்கு முன்பாக அந்த மனையைச் சுற்றியுள்ள பகுதிகளை நாம் பார்வையிட வேண்டும்.
மனைக்கு அருகில் மயானமோ மதுபானக்கடையோ இருந்தால் அங்கே மனை வாங்குவதைத் தவிர்த்துவிடலாம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். ஏதாவது ஏரிக்கரையையொட்டியதாகவோஅல்லதுமலைப்பகுதியையொட்டியதாகவோ இருந்தால் தவிர்ப்பது நல்லது.
மனையை வாங்கத் திட்டமிடும்போது அடிப்படை வசதிகளான போக்குவரத்து, கல்வி,மருத்துவம் போன்ற முக்கியமான தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய அளவில் அந்த வீட்டுமனை இருக்க வேண்டும்.
வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்க வேண்டும என்ற எதிர்பார்ப்புத் தேவையில்லை. ஆனால், ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இவை இருந்தால் நல்லது.
மனையின்நீள,அகலஅளவுகள் செவ்வகமாகவோ,சதுரமாகவோ இருப்பது போல் பார்த்து வாங்க வேண்டும்.
முக்கோணமாகவோ, ஏதேனும் ஒரு மூலை குறுகலாகவோ இருப்பதுபோல வாங்கினால், வீடு கட்டுவதும் சிக்கலாக இருக்கும்; வாஸ்துவும் சரிப்பட்டு வராது.
மனையின் விலை நிர்ணயம் குறித்த சந்தை மதிப்பீட்டு அறிவு நமக்கு வேண்டும். அந்தப் பகுதியில் என்ன விலைக்கு மனைகள் விற்கப்படுகின்றன என்பதை விசாரித்து அறிய வேண்டும். அப்படியில்லாமல், குலுக்கல் முறையில் ஃப்ளாட் தருகிறார்கள், வீட்டுமனையோடு இலவசமாக பைக் தருகிறார்கள் என்பன போன்ற கவர்ச்சிகரமான வியாபார உத்திகளுக்குப் பலியாகக் கூடாது.
சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அங்கீகாரம் பெற்ற மனையா எனப் பார்த்து வாங்க வேண்டும். பஞ்சாயத்து அப்ரூவ்டு என்றால் வாங்கக் கூடாது. ஏனெனில், அங்கீகாரமில்லாத மனைப்பிரிவில் வரும். மேலும், அதில் வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்காது.
ஒரு மனையின் விலையானது அதையொட்டியுள்ள சாலையை வைத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது. அந்தச் சாலை அகலமானதாக இருக்கும்பட்சத்தில் விலை அதிகமாக இருந்தாலும் வாங்கலாம். மிகக் குறுகியதாக இருந்தால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை.
மனைப்பகுதியில் நிலத்தடி நீர் எப்படியுள்ளது எனச் சோதித்துப்பார்க்க வேண்டும்.
உப்புத்தண்ணீராகஇருந்தால் கட்டுமானத்துக்கோ, குடிக்கவோமற்ற பயன்பாட்டுக்கோ உதவாது என்பதால் அந்த வீட்டுமனையை வாங்குவது பயனற்றது.
உப்புத்தண்ணீராகஇருந்தால் கட்டுமானத்துக்கோ, குடிக்கவோமற்ற பயன்பாட்டுக்கோ உதவாது என்பதால் அந்த வீட்டுமனையை வாங்குவது பயனற்றது.
மனையின் மூலப்பத்திரங்களை ஒன்றுக்கு இரண்டு வழக்குரைஞர்களிடம் கலந்தாலோசித்து அது குறித்த விசாரணைகளை முழுமையாக முடித்த பிறகு, சரியாக இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும்.
அடுத்ததாக தாசில்தார் அல்லது வி.ஏ.ஓ-வை அணுகி, அந்த வீட்டுமனைக்கு பட்டா கிடைக்குமா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்வது அவசியம்".
நம்பகத்தன்மையை எப்படி உறுதிசெய்வது?
``வீட்டுமனைக்கு சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி ப்ளான் அப்ரூவல் உள்ளதா என்பதை அரசாங்க இணையதளத்தில் காணலாம். அதில் காட்டப்பட்டுள்ள திட்டப்படி வீட்டுமனை அமைந்துள்ளதா என்பதையும், சர்வே எண் சரிதானா என்பதையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக, வீட்டுமனையின் உரிமையாளர், சட்டப்படி சரியான நபர்தானா என்பதைப் பார்க்க வேண்டும். பவர் மட்டும் உள்ளவர் என்றால், அந்தப் பவர் ஆஃப் அட்டர்னி செல்லுபடியாகுமா என்பதையும் வழக்குரைஞர் மூலம் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.வீட்டுமனைக்கான பத்திரங்கள் அனைத்தும் சரியானவையே என்பதையும், அந்த இடத்தின் மீது வில்லங்கம் ஏதுமில்லை என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்"
எனவே, வீட்டு மனையில் முதலீடு செய்வதில் மிகுந்த கவனத்தோடும் பொறுப்போடும் செயல்பட்டால், எதிர்காலத்தில் எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் அந்த இடத்தில் வீடு கட்டிக் குடியேறலாம். வேறு யாருக்கேனும் விற்பதாக இருந்தாலும், நல்ல விலைக்கு விற்கலாம். மேற்கூறியவற்றை மனதில்கொண்டால், சரியான வீட்டுமனையைத் தேர்வுசெய்வது எளிது.
Comments
Post a Comment