பாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்! இந்த உலகம் இன்றும் தன் இளமையைத் தக்கவைத்துள்ளதற்கான காரணம் நம்மைச் சுற்றியுள்ள ஏராளமான இயற்கை வளங்கள்தான். இதுநாள் வரையில் தன் முன்னேற்றத்துக்காக விலை மதிப்பில்லாத இயற்கை வளங்களை அழித்துவந்த மனித சமூகம், இன்று சற்றே தன் பாதையை மாற்றி நிலையான சமூகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தான், தன் வீடு, குடும்பம் என்று வாழ்ந்து வந்தவர்கள், இன்று அதிக பணம் செலவழித்து இயற்கையைக் காக்க முன்வந்துள்ளனர். குறைந்த அளவு நிலத்தில் குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி, அதிக அளவு வெளிச்சத்தைப் பயன்படுத்துகிற மாதிரி வீடுகளைக் கட்டி இயற்கையைப் பாதுகாத்து, அதனால் அவர்களும் பயனடைந்து வருகிறார்கள். இதுமாதிரி கட்டப்படும் வீடுகளுக்கு பசுமை வீடுகள் என்று பெயர். பசுமை வீடுகளை அமைப்பதற்கு என்னென்ன தொழில்நுட்பங் களையும் கருவிகளையும் பயன்படுத்தலாம் என்பதை விளக்கிச் சொல்லும் கருத்தரங்கம் சமீபத்தில் சென்னை டிரேட் சென்டரில் நடந்தது. இந்தியன் க்ரீன் பில்டிங் கவுன்சில் (IGBC) நடத்திய க்ரீன் பில்டிங் காங்கிரஸின் 11-வது சர்வதேச மாநாட்டில், குற...