வாஸ்துவுக்கு ஏற்ப அடுக்குமாடி வீட்டை அமைத்துக்கொள்வது எப்படி?
வாஸ்து சாஸ்திரத்தின்படி உருவான வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும். மனைக்கு அதிர்ஷ்ட திசைகளின் அம்சத்தை உணர்ந்து அதன்படி வீடுகளை அமைத்தால், குடும்பத்திலுள்ளவர்கள் ஆரோக்கியத்துடனும் செல்வச் செழிப்புடனும் வாழ முடியும். வாஸ்து சாஸ்திர விதிப்படி ஓர் இல்லம் எப்படி அமைய வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
நகரத்தில் வாழும் மத்திய தர மக்கள் பலரும் புறநகர்ப் பகுதியில் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட அல்லது வடிவமைப்பு செய்யப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கும்போது வாஸ்து பார்ப்பது எப்படி... ஜன்னலை மாற்றுவது, அறைகளை மாற்றுவது எல்லாம் சாத்தியம் இல்லையே’ என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. இந்தக் கேள்வியை முன்வைத்து, `அடுக்குமாடிக் குடியிருப்பில் வாஸ்து பார்ப்பது எப்படி... தோஷமில்லாத வீடுகளைத் தேர்வு செய்வது எப்படி?’
``வாஸ்து தொடர்பான சிக்கல்கள் எழாமல் இருக்க வேண்டுமென்றால், கட்டுவதற்குத் தயாராக இருக்கும் நிலையிலேயே உங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் அமைப்பை நீங்களே தேர்வு செய்யலாம். அதாவது வீடு கட்டுவதற்கு முன்னரே, அந்தக் கட்டட வடிவமைப்பாளரிடம் பேசி, உங்கள் வாஸ்து ராசிக்கேற்றபடி அறைகள், ஜன்னல், கதவுகளை அமைக்கச் சொல்லலாம்.
இது எளிதானது. ஆனால், பலருக்காகக் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளில் தனியாக உங்களுக்கு மட்டும் அமைப்பது சிரமமாக இருக்கலாம். எனவே, குறைந்தபட்ச வாஸ்து விதிகளைக் கடைப்பிடித்து உங்கள் வீடுகளை அமைக்கச் சொல்லலாம்.
மற்றொன்று, ஏற்கெனவே கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளைத்தான் தேடுகிறீர்கள் என்றால், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளைப் பார்த்து, வாஸ்து விதிகளுக்கு உட்பட்டிருக்கும் அடுக்குமாடி வீட்டைத் தேர்வு செய்யலாம். அதன்படி நீங்கள் தேர்வு செய்யும் வீடு வடக்கு, கிழக்குப் பக்கங்களில் காற்றும் ஒளியும் புகுமாறு ஜன்னல், கதவுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
கூடுமானவரை அடுக்கு மாடியில் நீங்கள் தேர்வு செய்யும் ஃபிளாட் செவ்வகம், சதுரம் என்ற ஒழுங்கான அளவில் அமைந்திருக்க வேண்டும். தலைவாசல் வடமேற்கு அல்லது தென்கிழக்கு பகுதிகளில் இருக்க வேண்டும்.
தென்கிழக்கில் சமையலறை, தென்மேற்கில் குடும்பத்தினர் உபயோகிக்கும் படுக்கையறை இருக்க வேண்டும். தென்கிழக்கில் வாசல் இருந்தால், வடமேற்கில் கழிவறை அல்லது வரவேற்பறையும், வடமேற்கில் வாசல் இருந்தால், தென்கிழக்கில் கழிவறை அல்லது வரவேற்பறையும் இருக்க வேண்டும். வடகிழக்கில் உள்ள அறை படிக்கும் அறையாக அல்லது குழந்தைகள் உபயோகிக்கும் அறையாக இருக்க வேண்டும்.
பூஜை அறை வடக்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். தனியாக பூஜை அறை இல்லாவிட்டால் இதே திசைகளில் ஹாலிலோ அல்லது சமையலறையிலோ உள்ள அலமாரிகளில் தெய்வப் படங்களை வைத்து வணங்கலாம்.
வழிபடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் திரைபோட்டு மூடி விடவேண்டும். கணபதி மற்றும் திருமகளின் படங்கள் அல்லது சிலைகள் வடக்கு நோக்கி இருக்க வேண்டும். லட்சுமி-குபேரன் அல்லது சொர்ணாகர்ஷண பைரவர் படங்களை வைப்பது நல்லது. பூஜை அறைக்கு இருபக்கமும் வெளிப்புறமாகத் திறக்கும் கதவுகள் இருக்க வேண்டும். அவற்றில் மணிகள் அமைத்து ஒலிக்கவைப்பது நல்ல அதிர்வுகளை வீட்டுக்குள் கொண்டு வரும். ஸ்வாமி படங்களை வெளியே சாலையைப் பார்த்தபடி மாட்டக் கூடாது. இப்படியெல்லாம் அமைந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை பார்த்து வாங்குவதே நல்லது. இதில் ஏதேனும் குறைகள் இருந்தால், வாஸ்து நிபுணர்களை அணுகி ஆலோசனைகளைப் பெறலாம்.
வாஸ்து பரிகாரத்துக்காக நீரூற்றுகள், பொம்மைகள், தாவரங்கள் வைப்பதெல்லாம் அவரவர் மனம் சம்பந்தப்பட்ட நம்பிக்கை. அப்படி வைப்பதானால் கிழக்கு, வடக்கு திசைகளில் பறக்கும் குதிரை, ஆமை, காசு வாயில் வைத்திருக்கும் தவளை, காற்றில் ஒலிக்கும் மணிகள் போன்றவற்றை வைக்கலாம்.
காற்று வீசும் வடமேற்கு திசையில் சிறிய நீரூற்றுகளை வைக்கலாம். உங்கள் பார்வையில் படும் இடத்தில் பணம் எண்ணும் மெஷினை வைக்கலாம். உங்கள் படுக்கையறை, படிக்கும் அறையின் பக்கமாகப் பசுமையான சிறிய செடிகளைத் தொட்டிகளில் வைக்கலாம். இது உங்களை உற்சாகப்படுத்தி, நல்ல அதிர்வுகளை உருவாக்கும். சூரியனின் சக்திதான் வாஸ்துவின் அடிப்படை என்பார்கள். அதன்படி நல்ல வெளிச்சம் வரும்படி உங்கள் வீடுகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்.’’
மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்கும், மனதுக்கு அமைதி தரும் விஷயங்களைப் பின்பற்றுவது நல்லது என்பதால் பின்பற்றலாம்தானே!
Wow super post.
ReplyDeleteFarmland for sale in and around Chennai
Agricultural land for sale in and around Chennai
DTCP approved land for sale in and around Chennai
CMDA approved land for sale in and around Chennai