ரேரா என்றால் என்ன? தமிழகத்தில் எந்த நிலையில் இருக்கிறது ரெரா சட்டம்?




ரேரா என்றால் என்ன?
ரியல் எஸ்டேட் துறையில் முக்கியமான சட்டம் ஒன்று கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது.    அதுதான்  `ரெராஎனச் சுருக்கமாகச் சொல்லப்படும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் (ரியல் எஸ்டேட் ரெகுலேஷன் அண்டு டெவலப்மென்ட்). நாடு முழுவதும், சொத்து (மனை, வீடு) வாங்குபவர் களின் நலனைக் காக்கவும், கட்டுமானத் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யவும் இந்தச் சட்டம் கொண்டு வரப்பபட்டுள்ளது. இந்தச் சட்டம், 2017 மே மாதம் அமலுக்கு வந்தது


ரெரா சட்டத்தின்கீழ், வீடு வாங்குபவர் அல்லது விற்பவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் நிவாரணம் பெறலாம். இந்த அமைப்பு, இரண்டு மாதத்துக்குள் உரிய தீர்வு அல்லது நிவாரணம் வழங்கும்.

ரெராசட்டம் நடைமுறைக்கு வந்து ஓராண்டு காலம் நிறை வடைந்த நிலையில், இந்தச் சட்டம் இன்னும் பல மாநிலங்களில் செயல்படுத்தப்படவில்லை. மகாராஷ்டிரா மாநிலம் இந்தச் சட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியுள்ளது. இதை மத்தியப்பிரதேச மாநிலமும் செயல்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.
 


தமிழகத்தில் எந்த நிலையில் இருக்கிறது ரெரா சட்டம்?
ரியல் எஸ்டேட் துறைக்கான சீர்திருத்தச் சட்டமாக, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் எனப்படும் ரெரா (RERA) சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்தச் சட்டம் 2017, மே 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது

ரெரா சட்டத்தைச் செயல்படுத்த, ‘தமிழ்நாடு ரெராஎன்று ஓர் அதிகார அமைப்பு அமைக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு இந்த அமைப்பு பொறுப்பெடுத்துக்கொண்டுள்ளது. இந்தச் சட்டத்தின் விதிமுறைகள் என்னென்ன, ஒப்பந்தம், பதிவு போன்றவற்றுக்கான மாதிரி வடிவம் (Format) என்ன, எப்படி விண்ணப்பிப்பது என்பன வற்றையெல்லாம் இந்த அமைப்பு உருவாக்கி யுள்ளது

இந்தச் சட்டத்தைச் செயல்படுத்துவதற்காக tnrera.in என்ற இணையதளம் வடிவமைக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு் வருகின்றன. இந்த இணையதளத்தில் விண்ணப் பிப்பதற்கான தளம், நுகர்வோர்களுக்கான குறைகளைப் பதிவு செய்யும் தளம் போன்றவையும் உள்ளன

இந்த இணையதளத்தில் இதுவரை 150 புராஜெக்ட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் புராஜெக்ட்டுகளின் விவரங்கள், அப்ரூவல் விவரங்கள் இருக்கும். மக்கள் யார் வேண்டு மானாலும் இதனைப் பார்க்க முடியும். 130 ஏஜென்டுகள் ரெஜிஸ்டர் செய்துள்ளனர்.   

எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரை, ரியல் எஸ்டேட் துறைக்குப் பலனளிக்கக்கூடிய இந்தச் சட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். பில்டர்களும் வரவேற்று, அதன்படி செயல்படவும் தயாராகி விட்டார்கள். முழுமையாக இந்தச் சட்டம் செயல்பட கொஞ்ச காலம் ஆகலாம். ஆனால், இந்தச் சட்டத்தின் மூலம் ரியல் எஸ்டேட் துறை ஒழுங்கு படுத்தப்பட்டு, வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்கு அரசுத் தரப்பிலிருந்து ஒத்துழைப்புக் கட்டாயம் தேவை.

அதேபோல், கட்டுமான நிறைவுச் சான்றிதழ் கொடுப்பதிலும் தாமதமாகிறது. மேலும், குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு மற்றும் கழிவு நீர் இணைப்பு போன்ற வற்றுக்கான அனுமதி வழங்குவதிலும் தாமதம். அரசிடமிருந்து இவற்றுக்கான அனுமதியைப் பெற்றுதான் பில்டர்கள் கட்டுமானத்தை நிறைவு செய்யமுடியும்

ரெரா' இல்லையேல் கட்டுமான நிறுவனங்களுக்கு கடன் இல்லை!

ரெரா சட்டத்தின் கீழ் கட்டுமான நிறுவனங்கள் பதிவு செய்யாவிட்டால் வங்கிகளிடம் இருந்து கடன் பெற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


இந்திய ரிசர்வ் வங்கியுடன் விவாதங்களை நடத்திய பின்னர், ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்தும் `ரெரா' (REAL ESTATE REGULATORY AUTHORITIES) சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படாத கட்டுமான நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில்லை என்பதை ஒருமனதாக வங்கிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. வங்கிகள் கடன் வழங்குவதைப் பொறுத்தவரை, ஒரு வலுவான பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றவே விரும்புகின்றன. இப்போது வங்கிகள் ரியல் எஸ்டேட் துறையில் கடன் கொடுப்பதில் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகின்றன.

கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன், வாராக் கடன் ஆகிவிட்டால் வங்கியாளர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை. ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட கட்டுமானம் அல்லது புதிய கட்டுமானம் என எதுவாக இருந்தாலும், கட்டுமான நிறுவனம் ரெரா சட்டத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கவில்லையென்றால் அவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. இந்த நிலையில், ரெரா சட்டத்தின் கீழ் கட்டுமான நிறுவனங்கள் பதிவு செய்யாவிட்டால் வங்கிகளிடம் இருந்து கடன் பெற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. 



ரேரா சட்டம் வீடு வாங்குபவர்களுக்கு பாதுகாப்பு கவசம் என்று சொல்லலாம்...

Comments

  1. Learning new strategies for life skills, personal growth, and productivity is SageWeekly easy, with insights that are practical, approachable, and inspiring for readers each week.

    ReplyDelete
  2. Staying inspired with lifestyle trends, tropical trips, and wellness ideas is PalmWeekly helpful, providing readers with friendly insights and practical tips to enjoy life fully.

    ReplyDelete
  3. ADVWeekly provides guidance that makes skill development, educational technology, and AI in learning approachable, offering readers practical ideas and fresh perspectives every week.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Things To Consider When Looking At Homes For Rent

Pros and cons of installing a mobile tower on your property