வீட்டுக் கடன்... வங்கி மாறும்போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்!
வீட்டுக் கடன்... வங்கி மாறும்போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்! - Courtesy - Nanayam Vikatan சொ ந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வங்கியில் கடன் வாங்குகிறோம். அந்தக் கடனை வாங்கிய பிறகு பல்வேறு காரணங்களினால் ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றுகிறோம். வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பது குறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் இந்திரா பத்மினியிடம் கேட்டோம். கடன் காலம்! “வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றும்போது முக்கிய மாகக் கவனிக்க வேண்டிது, கடனுக்கான தவணைக் காலம். நீங்கள் கடன் வாங்கும்போது எத்தனை வருடங்கள் வாங்கு கிறீர்களோ, அந்தக் காலத்துக்குத் தான் கடன் கிடைக்கும். அதாவது, 20 வருடம் கடன் வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதில் 5 வருடம் கடனை திரும்பச் செலுத்திவிட் டீர்கள். இப்போது வேறு வங்கிக்குக் கடனை மாற்றுகிறீர்கள் எனில், மீதமுள்ள 15 வருடத்துக்குத்தான் கடன் கிடைக்கும். அதற்குள் கடனை திரும்பச் செலுத்திவிடுவது முக்கியம். இதற்குள் வீட்டுக் க...