Posts

Showing posts from June, 2014

ஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா?

Image
அடுக்குமாடிக் குடியிருப்பு  வீடு வாங்குபவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு சதுர அடிக்கான விலை குறைவாக இருந்தால், வீட்டின் விலை மலிவாக இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதனால் லாபமே கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த நினைப்பு தவறாகவே இருக்கிறது. ஒரு சதுர அடிக்கான விலையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வீடு வாங்குபவர்கள் வீட்டின் உரிமையைப் பெறும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (U.D.S), வழங்கப்படுகிற வசதிகள் மற்றும் கட்டுமானத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளிட்டவை ஒரு சதுர அடிக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். 'புராஜெக்ட் ஏ’ என்பது 4 தளங்களில் சம அளவுள்ள 73 அபார்ட்மென்ட்களைக் கொண்டது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 89,000 சதுர அடி. கட்டுமானப் பரப்பளவு (பில்ட்-அப் ஏரியா) 76,650 சதுர அடி மற்றும் மொத்த மேற்பரப்பளவு (சூப்பர் பில்ட்-அப் ஏரியா) 1,02,200 சதுர அடி. இந்தத் திட்...