ஹவுஸிங் லோன்: ப்ரீகுளோஸ் செய்வது லாபமா? ( Housing Loan Pre Closure Profitable ?)
ஆர்.ராதாகிருஷ்ணன், இயக்குநர், ஃபின்பிளான் சொல்யூஷன்ஸ் ஹவுஸிங் லோன்: ப்ரீகுளோஸ் செய்வது லாபமா? எனது நண்பர் ராஜா, பிரபல தனியார் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் பிராந்திய மேலாளராக வேலை பார்க்கிறார். அவருக்கு இந்த ஆண்டுக்கான விற்பனை இன்சென்டிவாக 5 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கிறது. இதைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்து, என்னிடம் ஆலோசனை கேட்டு வந்தார். ''சந்தோஷம், இந்தப் பணத்தை எப்படி பயன்படுத்திக்கொள்ள திட்டம் போட்டிருக்கிறீர்கள்?'' என்று ராஜாவிடம் கேட்டேன். ''மூன்று ஆண்டுகளுக்கு முன் 11 சதவிகித வட்டியில் ரூ.25 லட்சம் வீட்டுக் கடன் வாங்கி, ரூ.35 லட்சம் மதிப்புள்ள ஒரு ஃப்ளாட்டை வாங்கினேன். தற்போது அந்த ஃப்ளாட்டில்தான் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். தற்போது கிடைத்த பணத்தை வீட்டுக் கடனை அடைக்க பயன்படுத்திக்கொள்ளலாமா அல்லது வேறு எதிலாவது முதலீடு செய்யலாமா'' என்று கேட்டார் அவர். நான் அவரிடம், ''இதற்கான பதில் எளிதானதல்ல. உங்களது முதலீட்டின் வருமானம், வீட்டுக் கடன் வட்டிக்கான வரிச் சலுகை முதலியவற்றைக் கணக்கிட்டு ஆராய்ந்த பின